உள்ளூர் செய்திகள்

இந்திய மூவண்ணத்தில் ஒளிர்ந்த உலகின் உயரக் கட்டடம்

இந்தியக் குடியரசு தின விழாவைக் கௌரவிக்கும் வகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடம் மூவண்ணத்தில் ஒளிர்ந்தது. கடந்த வாரம், அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். ஜன.26ல் நடந்த இந்தியக் குடியரசு தின விழாவில், அரசு சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டடம் என்று பெயர் பெற்ற துபாய் நாட்டின் புர்ஜ் கலிபா கட்டடம் முழுவதுமே இந்திய மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்டது. அந்தக் கட்டடத்தில், லட்சக்கணக்கான எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டு, மூவண்ண நிறத்தில் ஒளிர விடப்பட்டது. இந்தியக் குடியரசு தினத்தைக் கௌரவிக்கும் விதமாக, செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !