கணக்கில் புலியாக!
கணிதத்தில் ஆர்வம் உடையவர்களுக்கான இணையதளம் Underground Mathematics! இதனை உலகப் புகழ் பெற்ற, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில், கணிதப் பாடங்களும், அடிப்படை கணித கருத்துகளும், சூத்திரங்களும் வண்ணப் படங்கள் வாயிலாக சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. பாடங்களின் முக்கிய கேள்விகள், வழிகாட்டிகள் என பாடம் சார்ந்த விஷயங்களோடு, சிந்தனையைத் தூண்டும் புதிர்களும் உள்ளன. சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் கேட்டுப் பதில் பெறும் வசதியும் உள்ளது. இணைய பக்கத்திற்கு செல்ல: www.undergroundmathematics.org