உள்ளூர் செய்திகள்

எம்மொழியும் ஈடில்லை

தொன்மையினும் தொன்மையான தூய தமிழ்மொழி வன்மையினும் வன்மையான வண்ணத் தமிழ்மொழி பண்களெல்லாம் பாடவல்லபாட்டுத் தமிழ்மொழிஎண்களுண்டு எழுத்துமுண்டுஎங்கள் தமிழ்மொழி காப்பியங்கள் தோன்றியநற்கரும்பு தமிழ்மொழி பாப்புனைய யாப்புசொல்லும்பாகுத் தமிழ்மொழிவள்ளுவரைத் தந்து உலகம்வணங்கும் தமிழ்மொழிபள்ளு வஞ்சி பிள்ளைத்தமிழும்படித்த தமிழ்மொழி மக்கள் நாவில் நடம்புரியும்மாண்புத் தமிழ்மொழி சொற்கள் தொடர்கள் நன்கு தோன்றித் துலங்கும் தமிழ்மொழி எண்ணுதற்கும் எழுதுதற்கும் ஏற்ற தமிழ்மொழி கண்ணில் வைத்துப் போற்றுகின்றகன்னித் தமிழ்மொழி அறத்தை மறத்தை அன்பை பண்பைஆக்கும் தமிழ்மொழி திறத்தைப் பெருக்கித் தீரராக்கும்தெளிந்த தமிழ்மொழி செம்மொழியாய்ச் சீரடைந்துசிறந்த தமிழ்மொழி எம்மொழியும் ஈடேயில்லைஎங்கள் தமிழ்மொழி !- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !