உள்ளூர் செய்திகள்

உலகின் பெரிய நாய் கிரேட் டேன் சாதனை!

இங்கிலாந்து நாட்டின் சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த, ஃபிரெட்டி(Freddy) எனும் 'கிரேட் டேன்' வகை நாய், உலகின் பெரிய நாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட் டேன் வகையைச் சேர்ந்த நாய்கள், கம்பீரமான தோற்றம் மற்றும் அதிக உயரம் கொண்டவை.பதினெட்டு மாத கிரேட் டேன் நாயின் குறைந்தபட்ச எடையே 54 கிலோ. இந்நிலையில் சவுத்வேல்ஸை சேர்ந்த மூன்று வயதான ஃபிரெட்டி எனும்கிரேட் டேன், 7 அடி 6 அங்குல உயரத்துடன், மிகப்பெரிய நாய் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.இதன் எடை 92 கிலோ. 'இந்த நாய் பார்ப்பதற்கு அச்சுறுத்துவது போல் இருந்தாலும், மிக சாதுவான பிராணி. இதன் பராமரிப்புக்காக இதுவரை பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவழித்துள்ளேன்' என்று நாயின் உரிமையாளர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !