உள்ளூர் செய்திகள்

யூடியூப் ஸ்டார்ஸ்!

உங்கள் கையில் ஹெச்டி தரத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பதிவுசெய்து இணையத்தில் பகிரலாம். அவை, சுவாரசியமாக இருந்தால், நீங்களும் பிரபலமாக வாய்ப்புண்டு. அப்படி யூடியூபில் வீடியோக்களை பதிவுசெய்து சாதனையாளர்களாக வளர்ந்தவர்களைப் பார்ப்போம்.ராபி நோவக்அமெரிக்காவைச் சேர்ந்த ராபி நோவக், பாடகர், கவிஞர், சுயமுன்னேற்றப் பேச்சாளர் என அனைத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். 2012ஆம் ஆண்டு தொடங்கி சோல்பான்கேக் வலைத்தளத்தில் கிட் பிரசிடெண்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 'அன்பு உலகை மாற்றும். உலகை அன்பால் நிறைப்போம்” எனும் குழந்தை அதிபர், மரபணு நோயான ஆஸ்டியோ ஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா (osteogenesis imperfecta) வினால் பாதிக்கப்பட்டவர். இவரை 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். https://www.youtube.com/playlist?list=PLzvRx_johoA-YabI6FWcU-jL6nKA1Um-t&feature=plcpஈவன் (Evan)ஈவன் தன்னுடைய யூடியூப் சேனல் (Evantube) மூலம், உலகம் முழுக்க செலிபிரிட்டி நாயகனாகி இருக்கிறார். எப்படி? சந்தைக்கு வந்த புதிய பொம்மைகளை விமர்சிப்பது, ஏன்? எதற்கு? எப்படி? வகையறா வீடியோக்களை பதிவிட்டு 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஈவனின் தந்தை திரைப்படக்கலைஞர் என்பதால், வீடியோக்களுக்கு அவரே இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். வீடியோக்களுக்கு ஈவன் மற்றும் அவரது தங்கை ஜில்லியன் காம்பியர்களாக மாறி அசத்துகின்றனர். இவர்கள் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். https://www.youtube.com/channel/UCHa-hWHrTt4hqh-WiHry3Lwமியா (MYA)பாட்டிலில் முட்டை, ரூபி க்யூப் சோதனை, பாட்டில் தெர்மாமீட்டர் என சிறிய ஆச்சரியமூட்டும் அறிவியல் சோதனைகளை மியா (FullTimeKid) செய்து காட்டுகிறார். இவரது நிகழ்ச்சி பிபிஎஸ் (PBS) டிவி சேனலிலும் ஒளிபரப்பாகி உள்ளது. 78 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களை தனது குறும்பான, அறிவுப்பூர்வ சோதனைகளுக்குப் பரிசாகப் பெற்றுள்ளார் மியா. https://www.youtube.com/channel/UC0Grg2zrx1qlJtipR8_7GiQ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !