UPDATED : ஏப் 04, 2024 03:42 PM | ADDED : ஏப் 04, 2024 03:40 PM
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராவ்பகதுார் எ.கா.த.தர்மராஜா நடுநிலைப்பள்ளியில் 30 ஆண்டுகாலம் தலைமை ஆசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர் புலவர் கி.ராமதிலகம்.பணி நிறைவிற்கு பிறகும் ஒய்வின்றி தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.ராஜபாளையம்,சிவகாசி,கடலுார்,பாண்டிச்சேரி,திருஈங்கோய்மலையில் உள்ள 13 பள்ளிகளுக்கு சென்று தமிழ் இலக்கணத்தை, இசையுடன் சொல்லிக் கொடுத்துள்ளார்.இசையோடு கூடிய இலக்கணத்தை கற்றுத்தரும் இவரது திறமை காரணமாக மேலும் பல்வேறு பள்ளிகள் இவரை வந்து பாடம் நடத்துமாறு கேட்டுள்ளனர்.இவரது இனிய தமிழ்ச் சொற்பொழிவு காரணமாக காசி தமிழ்ச்சங்கத்தில் உரையாற்ற இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி அங்கு தனது முத்திரையை பதித்தவர்.
தமிழ்ப்பணிக்காக பற்பல விருதுகள் பெற்றதுடன் பல்வேறு ஆன்மீகப்பணியிலும்,சமுதாயப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.இவரது இத்தகைய பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கப்பட்டுள்ளது.இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்,தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சுசீலா ஆகியோர் சிறப்பு கவுரவம் செய்தனர்.எளிய சமுதாயத்திற்கான இவரது தமிழ் இலக்கிய பணி தொடரட்டும்,சிறக்கட்டும்.