உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / சென்னை இமேஜ் போட்டோ வீடியோக கண்காட்சி

சென்னை இமேஜ் போட்டோ வீடியோக கண்காட்சி

சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நடைபெறும் மூன்று நாள் போட்டோ மற்றும் வீடியோ கண்காட்சி நேற்று துவங்கியது.திருமணப் படங்கள் எடுக்கும் வெட்டிங் போட்டோகிராபர்களை குறிவைத்துதான் இந்த கண்காட்சி நடக்கிறது.காரணம் அவர்களுக்கு என்ன என்ன மாதிரியான விஷயங்கள் தேவைப்படும் என்பதையே இங்கு ஹைலைட்டாக வைத்துள்ளனர்.நிக்கான்,சோனி,பியூஜி.,போன்ற முன்னனி கேமரா நிறுவனங்கள் தங்களது அரங்குகளில் புதிதாக வந்துள்ள கேமராக்களை அறிமுகம் செய்து யார் வேண்டுமானாலும் இயக்கிப்பார்க்க அனுமதி கொடுத்துள்ளதுடன் கேமராக்கள் முன்பாக போஸ் கொடுக்க மாடல்களையும் நிறுத்திவைத்துள்ளனர்.கூடுதலாக தாங்கள் விற்ற கேமராக்களை இலவசமாக சர்வீஸ் செய்துதரும் தற்காலிக சென்டரையும் பக்கத்திலேயே அமைத்துள்ளனர் பாராட்டத்தக்க விஷயமாகும்.ஆல்பம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கற்பனையை எல்லாம் உடைக்கும் வகையில் ஆல்பங்களை வைத்துள்ளனர், கிட்டத்தட்ட ஆள் உயரத்திற்கு உள்ள ஆல்பங்களை எல்லாம் இங்குதான் பார்க்கமுடிகிறது.பிளாஷ் போட்டோகிராபியில் எலின்குரோம் நிறுவனத்தின் தயாரிப்புகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ஒரு சாமனியனின் படத்தைக் கொடுத்தால் அதை டிஜிட்டல் ஆர்ட்டாக ராஜ அலங்காரத்துடன் உருவாக்கித் தருகின்றனர், இதற்காக புதுக்கோட்டையில் இருந்து வந்து முகாமிட்டுள்ள இளைஞர்களின் படைப்பு மற்றும் ரசனை பலரையும் வியக்கவைக்கிறது.கண்காட்சியின் ஹைலைட் ரோபோ போட்டோ பூத்தாகும்.கல்யாண வீடுகளில் அங்குமிங்கும் பெண் போல வேடமிட்டு நகர்ந்து, நகர்ந்து விருந்தினர்களை படம் எடுத்து உடனடியாக கொடுக்கும் ரோபோ கேமரா பூத் தெரியும், அதன் ஹையர் வெர்ஷன் இது, இன்ஸ்டன்ட படமும் எடுத்துக் கொடுக்கும் கூடவே நல்ல ரெசிலுஷனில் படமும், வீடியோவும் கூட எடுத்துக் கொடுக்குமாம்.பியூஜி நிறுவனத்தின் குட்டி கேமரா தாம்ரான் நிறுவனத்தின் லென்ஸ்கள் விதவிதமான கேமரா பேக்குகள் அமெரிக்க நிறுவனத்தின் ஸ்ட்ராப்புகள் குழந்தைகளை படம் எடுக்க தேவையான பொருட்கள் என்று கண்காட்சியில் பார்க்க, வாங்கக்கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.கண்காட்சி நடத்துபவர்கள் புகைப்பட ஆர்வலர்கள் அதிகம் படிக்கும் 'தினமலர் போன்ற பத்திரிகைளில் விளம்பரம் கொடுத்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அது அனைத்து தரப்புக்குமே பயனளிக்கும்.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை