உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பண்டோரா பறவைகள் பூங்கா

பண்டோரா பறவைகள் பூங்கா

திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையானது ஊட்டி,கொடைக்கானல் போல பிரபலமான மலை வாசஸ்தலமாக இல்லாவிட்டாலும் வளர்ந்துவரும் சுற்றுலா தலமாகும்.இது இந்த சுற்றுலா தலத்திற்கு பிளஸ் பாயிண்டும் கூடநியாயமான வாடகையில் தங்குவதற்கு வீடுகளே கிடைக்கின்றன,சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுவது இல்லை வாகன நெரிசல் கிடையாது ஆகவே எதையும் அமைதியாக ரசிக்கலாம்,அட்வென்சர் பார்க்குள் உள்ளன.ஏலகரிவரும் சுற்றுலா பயணிகள் பலரையும் கவர்வது பண்டோரா பறவைகள் பூங்காதான்.பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும் .300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு-அயல்நாட்டு பறவை இனங்கள் திறந்த வெளியில் தங்கவைக்கப்பட்டுள்ளன. மக்காவ் கிளி முதல் நெருப்புக் கோழி வரை பலவிதமான பறவைகள் இருக்கின்றன.இவைகள் மனிதர்களுடன் பழக பழக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் கையில் தரப்படும் உணவை சாப்பிட கையிலேயே வந்து உட்காருகிறது, தலை தோள் மீது உட்கார்ந்து விளையாடுகிறது.இது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பெரிதும் பிடிக்கிறது.பறவைகள் மட்டுமின்றி பலவிதமான எலிகள் குட்டை மாடுகள், முயல்கள் மற்றும் உடும்புகள் போன்றவைகளையும் காணலாம்.இது ஒரு தனியார் பூங்கா அனுமதிக்கட்டணம் உண்டு அனுமதிக்கட்டணம் அதிகமாக பட்டது ஆனால் உள்ளே கிடைத்த ஆனந்தம் அந்த கட்டணத்தை நியாயப்படுத்தியது. ஏலகிரி பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீட்டர் துாரத்தில் உள்ளது, பஸ் போக்குவரத்து கிடையாது உள்ளூர் வாடகை ஆட்டோ அல்லது சொந்த வாகனம் உபயோகித்து போகலாம்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
ஆக 08, 2024 16:26

பறவைகள் மனிதர்கள் மீதே அமர்ந்து இரை கேட்பதோ, விளையாடுவதோ நல்ல விஷயம் அல்ல .... அவற்றின் சுதந்திர உணர்வு பறிபோய்விட்டதன் அடையாளம் இது ..... அவற்றின் அடுத்த தலைமுறை முற்றிலும் சுயச்சார்பை இழந்து மனிதர்களுக்கு அடிமைகளாக வளரும் ...........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை