உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / திருமலையில் ராமநவமி கொண்டாட்டம்.

திருமலையில் ராமநவமி கொண்டாட்டம்.

ராம நவமி என்பது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் ராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகையாகும்நாடு முழுவதும் உள்ள ராமர் கோயில்களில் இந்நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் பிரதான ராம் லல்லா சிற்பத்தின் மீது சூரிய ஒளி விழுந்ததை பக்தர்கள் பலரும் தரிசித்தனர்.அயோத்தியில், புனித ஆறான சரயுவில் ஏராளமானவர் நீராடினர். ராமன், சீதை,லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் ரத ஊர்வலங்கள், பல இடங்களில் நடத்தப்படுகின்றன. ராம நவமி விழாவையொட்டி திருமலை கோயிலில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் ஸ்ரீ சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.உலக பக்தர்களின் நலன் கருதி சிறப்பு அபிஷேகம் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை