மேலும் செய்திகள்
மலையாள சினிமாவின் சார்லி சாப்ளின்
23-Aug-2026
தங்கம் ஏறினால் என்ன... டெரகோட்டா போதுமே!
23-Aug-2026
‘டிரெண்டிங்’ ஆகி வரும் 80’ஸ் 90’ஸ் பாடல்கள்
22-Aug-2026
ஒரு சைக்கிள்தானே...இந்தாம்மா ஓட்டு!
22-Aug-2026 | 1
வகுப்பறை... கரும்பலகை... பாடப்புத்தகம்... ஆசிரியர் என்ற வழக்கமான கல்வி முறைக்கு மாறாக, மரங்களின் நிழலிலும், பூக்களின் நடுவிலும், பட்டாம்பூச்சி சிறகுகளின் அசைவிலும் பாடம் கற்கின்றனர் மாணவர்கள். வெள்ளலுார் குளக்கரையில்தான் இந்த காட்சி. 260 வகையான மரங்கள், 250க்கும் மேற்பட்ட பூச்செடிகளுடன் சும்மா ஜில்லென்று இருக்கிறது சூழல். பூச்செடிகளை தேடி பட்டாம்பூச்சிகளும், பறவைகளும் வருகின்றன. 106 வகையான பட்டாம்பூச்சிகளும், 156 வகையான பறவைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கெனவே இங்கு அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி பூங்காவின் சிறப்பு, இயற்கை சூழலை உருவாக்கி, அவற்றை சுதந்திரமாக வாழவைப்பதுதான். முட்டையாக தொடங்கி, கேட்டர்பில்லராகி, கூட்டுப்புழுவாகி, பின்னர் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக மாறும் வாழ்க்கை சுழற்சியை பாடப்புத்தகத்தில் மட்டும் பார்த்து வந்த மாணவர்கள், நேரில் பார்த்து சிலிர்த்து போகின்றனர். நொய்யல் ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலை, நீர்நிலைகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து குறும்படம் மூலம் விளக்கப்படுகிறது. இங்குள்ள மியாவாக்கி காட்டுக்குள் செல்லும் மாணவர்கள், காட்டுக்குள் வெப்பநிலை எவ்வாறு மாறுகிறது என்பதை பீல் செய்கின்றனர். இந்த திறந்தவெளி வகுப்பறையை தொடர்பு கொள்ள, 98433 46298.
23-Aug-2026
23-Aug-2026
22-Aug-2026
22-Aug-2026 | 1