உள்ளூர் செய்திகள்

குவைத் இந்திய தூதரகத்தில் பிரிவு உபசார விழா

குவைத் : குவைத் இந்திய தூதரகத்தில் பணியாற்றி பணி மாறுதல் பெற்று செல்லும் அதிகாரிகள் ஆனந்தா எஸ்.ஆர். ஐயர், புருஷோத்தம் குமார் மற்றும் பணி ஓய்வு பெற்று செல்லும் கே. டேவிட் ராஜு ஆகியோருக்கு இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது அந்த அதிகாரிகளின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !