ஷார்ஜா மற்றும் துபாயில் தமிழ் குறும்பட விழா
துபாய் : அமீரகத்தில் வாழும் தமிழர்களின் தணியாத நடிப்பார்வத்தை வெளிக்கொணரும் வண்ணம் 2016 முதல் நடைபெற்று வரும் அமீரக குறுநாடக குழுவினரின், 2020 ம் வருட கொரோனா காலகட்ட முயற்சியான தமிழ் குறும்பட விழா, நான்காவது ஆண்டு கொண்டாட்டமாக இரு தினங்களில் மூன்று நிகழ்வாக நடைபெற்றது.முதல் நாள்13.4.2024 சனிக்கிழமை மாலை விழாவின் சிறப்பு விருந்தினரும் நடுவருமான பிரபல நடிகை கலைமாமணி குட்டி பத்மினியை துபாய் அல் நஹ்தாவில் உள்ள லேவண்டர் ஹோட்டல் அரங்கில், சந்தித்து உரையாடினர் குறும்பட எழுத்தாளர்களும் இயக்குனர்களும்!தனது வாழ்க்கை அனுபங்களையும் அதன் மூலம் கற்ற பாடங்களையும் தான் பெற்ற மனவலிமையையும் விடா முயற்சியையும் பகிர்ந்துகொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் தமிழகத்தின் முன்னோடியாய் சென்னையிலும் மும்பையிலும் தான் சந்தித்த சவால்களை விவரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.அடுத்த நாள், 14.4.2024 அன்று காலை ஷார்ஜாவில் உள்ள அல் ஷாப் சினிமா திரையரங்கில், ஏறத்தாழ இரு நூறு ரசிகர்கள் திரள அனைத்து படங்களும் திரையிடப்பட்டன. தங்களையும் தங்கள் பெயர்களையும், வெள்ளித் திரையில் முதல் முறை கண்ட பலரும் பரவசத்தில் ஆழ்ந்தனர்.14.4.2024 அன்று மாலையே துபாய் ஔத் மேய்த்தா பகுதியில் உள்ள இரானியன் சங்க அரங்கில் அனைத்து குறும்படங்களில் பங்கு கொண்டவர்களுக்கும் நினைவு பரிசும் மிக சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.வெற்றியாளர்களின் விவரங்கள்:1. முதல் குறும்பட கதை வசனம்: ஜோயல் ஜெய் சிங் (டிக் டாக்)2. முதல் குறும்பட பதாகை: ஸ்ரீ ஹரீஷ் மற்றும் இலக்கியா ஸ்ரீ ஹரீஷ்(N.C.)3. சிறந்த குறும்பட பதாகை : 1. சிவசங்கரி (நயன் சாரா பயன் சாரா நா)2. பார்வதி நாராயணன் (கனவலைகள்)4. சிறந்த உடை/ஒப்பனை: 1.உம் சொல்றியாமாமா2. அடையாளம்5. சிறந்த அறிமுகம்: நடிகர்: குருநடிகை : ரூபா பிரபுகிருஷ்ணன்இயக்குனர்: ராஜா மொஹமத்6. சிறந்த ஒளிப்பதிவு1.குறும்படம் தீவரா2.குறும்படம் டெவில் டாக் 7.சிறந்த கதை,திரைக்கதை வசனம்1. புறப்பாடு2. என்னவளே அடி என்னவளே 8. சிறந்த இசை1. தீவரா2. இப்பொழுது இக்கணம் 9. சிறந்த குழந்தை நட்சத்திரம்1. ரித்திகன் (இருக்கு ஆனா இல்ல)2. ஐஸ்வர்யா சிம்ஹன் ( பேசும் குறும்படம்) 10. சிறந்த குணச்சித்திர நடிப்பு1. யமுனாசுந்தர் (பானிபூரியும்பஞ்சாபிசமோசாவும்)2. ராஜாராம் (இருக்குஆனாஇல்ல) 11 சிறந்தநடிகர்1. ஜெகன்( மிசஸ்அந்தோணிபிச்சை)2. சிவநிரஞ்சன்( தீவரா)12 சிறந்தநடிகை1. ரேவதிகிருஷ்ணா (உம்சொல்றியாமாமா)2. ஆனுசௌந்தர்( பானிபூரியும்பஞ்சாபிசமோசாவும்)13. சிறந்தஇயக்குனர்1. புறப்பாடு (கௌசர்பெய்க்)2. தீவரா( அதிக்ரஹ்மான்) 14. சிறந்தகுறும்படம் 20241. தீவரா - அதிக்ரஹ்மான்2. மௌனமே- அர்விந்த்பாரதிநடுவரின்சிறப்புநினைவுபரிசு1. காலம்மாறுமா- ஷ்யாம்மணிகண்டன்/ அனன்யாமணிகண்டன் (கதை)2. ஹரீஷ்- உம்சொல்றியாமாமா - நகைச்சுவைநடிப்பு3. வீருவீரமணி- கடைசிமுத்தம்- குணச்சித்திரநடிப்பு4. மனோஜ் - அடையாளம் - சிறந்தநடிப்பு5. பாலாஜிபாஸ்கரன் - நோகமெண்ட்ஸ் - சிறந்தநடிப்பு6. மொஹமத்சலீஹ் - நோகமெண்ட்ஸ்- சிறந்தஒளிப்பதிவு7. ஸ்ரீஜாவிஜயன் - கடைசிமுத்தம் - சிறந்தநடிப்பு8. முருகப்பன்அழகப்பன் - ஒ சரிசரி - சிறந்தவில்லன்வேடம்.நடுவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகளும், பங்குபெற்றவர்க்கு நினைவு பரிசும், நிகழ்ச்சி நிறைவாக நடைபெற உறுதுணையாய் நின்ற புரவலர்களை அளிக்க வைத்து பெருமை கொண்டனர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஆனந்த் மற்றும் ரமா மலர்.- நமது செய்தியாளர் காஹிலா