உள்ளூர் செய்திகள்

கடைசி காலத்தில்...

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சாலமன் பணத்தின் அருமை தெரிந்தவன். அதனால் மனைவி, குழந்தைகளுக்கு கூட நேரம் ஒதுக்காமல் எப்போதும் பணத்தையே சிந்திப்பான். அதே போல உரிய நேரத்தில் மகன், மகளுக்கு திருமணமும் நடத்தினான்.பணம் சேர்ப்பதில் இருந்த ஆர்வம் தர்மம் செய்வதில் இல்லை. இளமை மறையவே முதியவராக மாறினான். ஒருநாள் படுக்கையில் இருந்தபடியே பைபிளை படித்த போது அழுகை வந்தது. அதை கண்ட மனைவி, 'ஏன் அழுகிறீர்கள்' எனக் கேட்டாள். 'பணத்தை தேடி அலைந்து என் வாழ்நாளை வீணாக்கி விட்டேன். உதவி என கேட்டு வந்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லையே' என்றார் சாலமன். பணத்தை மட்டுமே தேடினால் சாலமன் போல கடைசி காலத்தில் நாம் வருந்த நேரிடும் ஜாக்கிரதை...