அவரும் இவரும்
UPDATED : டிச 29, 2023 | ADDED : டிச 29, 2023
ஆண்டவரின் சீடரில் முக்கியமானவர் பீட்டர். நண்பர்கள் என்ன திட்டினாலும் விளையாட்டாக எடுத்துக் கொள்வார் இவர். இதற்கான காரணத்தை சிலர் கேட்டனர். அதற்கு அவர், 'பிரியமுடைய சாத்தானே என்று ஆண்டவரை திட்டியபோதும் அவர் கோபப்படவில்லை' என தெரிவித்தார். அதைப்போல் மற்றொருமுறை பீட்டர் வேறு நாட்டுக்குச் சென்று ஊழியம் செய்தததற்காக மன்னர் சிலுவையில் அறைய உத்தரவு இட்டார். அப்போது கூட “எனது ஆண்டவரை சிலுவையில் நேராகத் தொங்க விட்டீர்கள். அந்த தகுதி எனக்கு இல்லை என்னை தலைகீழாகத் தொங்க விடுங்கள்” என தெரிவித்தார்.