உள்ளூர் செய்திகள்

தினமும் நாளிதழ் படிங்க

நகரத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்துபவர் ஜேம்ஸ். கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தும் தம்பியுடன் வசிக்கும் தாயாரை பார்க்கச் சென்றான். அங்கு வாடிக்கையாளர்கள் கேட்கும் பலசரக்குகளை பொட்டலமாக கொடுத்த தம்பியிடம், 'டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்திலும் செய்தித்தாளில் மடித்து தருகிறாயே' எனக் கேட்டான் ஜேம்ஸ். அன்றாட நாட்டு நடப்பு மட்டுமில்லை...செய்தித்தாளில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு, கோலப்போட்டி, குழந்தைகளுக்கான போட்டிகள், மாணவர்களுக்கான வினா வங்கின்னு எத்தனையோ நல்ல விஷயங்கள் வெளிவருகின்றன. அதனால் தான் நாளிதழ் படிக்க இங்க ஒரு டேபிளும், பெஞ்சும் இருக்கு பாருங்கண்ணே... இதுவும் கூட வாடிக்கையாளர் சேவைதான் என விளக்கம் அளித்தான் தம்பி. தன்னுடைய நிறுவனத்திலும் செய்தித்தாளை விற்பனைக்கு வைக்க முடிவு செய்தான் ஜேம்ஸ்.