உதவும் கைகள்
UPDATED : மே 03, 2024 | ADDED : மே 03, 2024
சிறுவன் ஜெயசீலன் தினமும் தாத்தாவுடன் சர்ச்சுக்குச் செல்லும் வழியிலுள்ள பாலத்தின் அடியில் ஆதரவற்றோர் இளைப்பாறுவதைக் கவனிப்பான். ஒருநாள் சிறுவன் ஒருவன் கிழிந்த சட்டையுடன் அங்கு நிற்பதைக் கண்டான். பெற்றோரின் அனுமதியுடன் தன் சட்டை, டிரவுசர்களை அந்த சிறுவனுக்குக் கொடுத்தான். ஏழைச் சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இதன்பின் ஜெயசீலனின் பெற்றோர் வீட்டில் இருந்த பழைய துணிகளை எல்லாம் ஏழைகளுக்கு தானமாக கொடுத்தனர்.