வெள்ளி டம்ளர்
UPDATED : மே 24, 2024 | ADDED : மே 24, 2024
விஞ்ஞானியான மைக்கேல் பாரடேவின் ஆய்வுக்கூடத்தில் பணியாளன் ஒருவன் இருந்தான். ஒருமுறை அவன் கையில் இருந்த வெள்ளி டம்ளர் ஒன்று அமிலத்திற்குள் தவறி விழுந்தது. ஓரிரு நிமிடத்தில் டம்ளர் அப்படியே கரைந்து போனது. தயக்கமுடன் விஞ்ஞானியிடம் நடந்ததை தெரிவித்தான். வேறொரு அமிலத்தை அதற்குள் ஊற்றினார் விஞ்ஞானி. கரைந்த வெள்ளித் துகள்கள் ஜாடியின் அடியில் தங்கின. அதை வடிகட்டி கொல்லனிடம் கொடுக்க, மீண்டும் டம்ளர் தயாரிக்கப்பட்டது. இதைப் போலவே பாவங்களைப் போக்கி மனிதர்களுக்கு நல்வழி காட்டுகிறார் ஆண்டவர். 'நாங்கள் களிமண். நீரே எம்மை உருவாக்குகிறீர்' என்கிறது பைபிள்.