பலமறிந்து பணியாற்று
UPDATED : மே 31, 2024 | ADDED : மே 31, 2024
காட்டிற்குள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன். களைப்பு மிகுதியால் துாங்கினான். அப்போது வானில் வட்டமிட்ட கழுகு ஒன்று அங்கிருந்த ஆட்டுக்குட்டி ஒன்றைக் தன் கால்களால் கவ்விக் கொண்டு பறந்தது. அதை பார்த்த காகம் ஒன்று, தானும் அது போல செயல்பட எண்ணி ஒரு ஆட்டின் முதுகில் அமர்ந்தது. அது கொழுத்த ஆடு. காகத்தின் கால்கள் அதன் ரோமத்தில் சிக்கியது. பிறகென்ன... கண் விழித்த இளைஞன், சிக்கிய காகத்தின் மீது இரக்கப்பட்டு அதை விடுவித்தான். எனவே பலமறிந்து பணியாற்றுங்கள்.