கீதம்... சங்கீதம்
UPDATED : மே 31, 2024 | ADDED : மே 31, 2024
பாடலாசிரியை பேனி ஜேன் கிராஸ்பி தன் நண்பருடன் இசை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த தோவன் என்ற இசை வல்லுநர், 'ராகம் ஒன்றை அமைத்திருக்கிறேன். அதற்கேற்ற பாடலை எழுத முடியுமா?' எனக் கேட்டார். ஆர்மோனியத்தில் குறிப்பிட்ட ராகத்தை இசைத்தும் காட்டினார். அதைக் கேட்ட பேனி, '' இந்த இசையால் 'இயேசுவின் கைகள் காக்க' என்ற வரி எனக்குள் தோன்றுகிறது. உடனே தனிமையில் அமர்ந்து பாடலையும் எழுதினார். அந்த பாடல் இன்றும் சர்ச்களில் பாடப்படுகிறது.