எண்ணம் வலிமையானால்...
UPDATED : ஜூன் 27, 2024 | ADDED : ஜூன் 27, 2024
ஒன்றாக வளர்ந்த மூன்று மரங்கள் ஒரு காட்டில் இருந்தன. அதில் முதல் மரம் ஆபரணப் பெட்டியாக மாற வேண்டும் என்றும், இரண்டாவது மரம் படகாக வேண்டும் என்றும், மூன்றாவது மரம் ஆண்டவருக்கு அருகில் இருக்கும் பேறு பெற வேண்டும் என ஆசைப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரங்கள் வெட்டப்பட்டன. அவற்றின் ஆசைப்படியே முதல் இரண்டு மரங்களும் பெட்டியாகவும், படகாகவும் ஆண்டவர் அருளால் மாற்றப்பட்டன. மூன்றாவது மரம் வெட்டப்பட்டு அங்கேயே கிடந்தது.ஒருநாள் அதை இரு துண்டுகளாக்கி சிலுவை செய்தார் தச்சர். அதில் ஆண்டவரின் சொரூபம் வைக்கப்பட்டு ஆலயத்தை அடைந்தது. எண்ணம் வலிமையானால் நினைத்தது நிறைவேறும்.