வாழ்க்கைக்கல்வி
UPDATED : டிச 11, 2022 | ADDED : டிச 11, 2022
வயதான விவசாயி ஒருவருடைய ஆடு காணாமல் போனது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர் மீது பரிதாபப்பட்டனர். அதற்கு அவர், ''இதனால் என்ன... பரவாயில்லை'' என சொன்னார். மறுநாள் அந்த ஆடு தன்னுடன் சில ஆடுகளை அழைத்து வந்தது. இதைப்பார்த்தவர்கள் ''நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிப்பா'' என்றனர். அதற்கும் அவர் எந்தவொரு மகிழ்ச்சியும் அடையவில்லை. இதை கவனித்த அவரது மகன், ''எப்படிப்பா... இப்படி உங்களால் இருக்க முடிகிறது'' என்று கேட்டான். ''எப்போதும் இன்பமும், துன்பமும் வரும். அதற்காக மகிழ்ச்சியோ, வருத்தமோ அடையக்கூடாது. மனதை சமநிலையாக வைத்துக்கொள். இந்த வாழ்க்கை கல்வி உனக்கு எப்போதும் உதவும்'' என்றார் விவசாயி.