மனத்தெளிவுக்கு...
பெரியபுராணத்தில் உள்ள சிவநாமங்களை தொகுத்துள்ளோம். இதைப்பாடினால் பயம் தீரும். மனதில் தெளிவு பிறக்கும். மைதிகழ் கண்டா போற்றிஎண்தோள் மறையவா போற்றிகுழைப்பொலி காதினாய் போற்றிவெள்ளை விடையவா போற்றிபொருவிடைப் பாகா போற்றிஆரம் என்பு புனைந்த ஐயா போற்றிஇமக் குலக்கொடி பாகா போற்றிதிரை செய் நீர் சடையா போற்றிமங்கையைப் பாகமாய் உடையாய் போற்றிதில்லை மன்றுள் ஆடிய பெருமான் போற்றிஇமயப் பாவை துணைவா போற்றிவன்தாள் மேருச்சிலை வளைத்துப் புரங்கள்செற்றவா போற்றிசேணார் மேருச் சிலை வளைத்த சிவனார் போற்றிபிறைசூடிப் பூணார் அரவம் புனைந்தாய் போற்றிஅந்தி வண்ணா போற்றிமுக்கண் நக்கராம் முதல்வா போற்றிபிறைத்தளிர்ச்சடைப் பெருந்தகையே போற்றிகண்ணுதற் கரந்தோன் போற்றிகங்கைமடுத்ததும்பிய வளர்சடைமறைத்த மறையோன் போற்றிமறி கரந்து தண்டேந்திய மறையவா போற்றிமங்கைபாகராம் மறையவா போற்றிமலர்மிசை அயனும் மாலும் காணுதற்கரிய வள்ளலே போற்றிஅழலவிர் சடையா போற்றிகளி யானையின் ஈர் உரியாய் போற்றிஎளியார் வலியாம் இறைவா போற்றிஅளியார் அடியார் அறிவே போற்றிதெளிவார் அமுதே போற்றிஆறும் மதியும் அணியும் சடையா போற்றிஇழையணி காதினாய் போற்றிதேனாரும் தண் பூங்கொன்றைச் சடையா போற்றிநஞ்சணி கண்டா போற்றிமேலவர் புரங்கள் செற்ற விடையா போற்றிதிங்கள் சேர் சடையா போற்றிஏக நாயகா போற்றிதிருக்காளத்தி நாயனார் போற்றிஅண்ணலே போற்றிவிமலா போற்றிதிருக்காளத்தி மலையினாய் போற்றிகாணுதற்கரியாய் போற்றிகுழையணி காதினாய் போற்றிஎந்தையே போற்றிஅரும்பெறல் தம்பிரானே போற்றிவானவர் நாயகா போற்றிமுதல்வனே போற்றிதிங்கள் அணிந்த சடைமுடிக்கற்றை அங்கணா போற்றிகாளத்தி அண்ணலே போற்றிகாளத்தி அப்பரே போற்றிதிருக்காளத்தி முதல்வனே போற்றிமின் திகழும் சடை மவுலி வேதியா போற்றிபுனற் சடிலத் திருமுடியா போற்றி