உள்ளூர் செய்திகள்

பின்பற்ற மறவாதீர்

மகாளய பட்ச காலத்தில் இந்த வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.* தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.* சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.* தாம்பத்யம் கூடாது.* வீட்டில் வாக்குவாதம் செய்யக்கூடாது.* வெளியிடத்தில் சாப்பிடுவது, வெங்காயம், பூண்டு, முருங்கை சேர்ப்பது கூடாது.* இந்த காலகட்டத்தில் முன்னோர் நம்முடன் இருப்பதால் விருந்துண்ணக் கூடாது.* மது, மாமிசம் சாப்பிடக் கூடாது.* கறுப்பு எள்ளை யாரிடமும் கடன் வாங்கக் கூடாது.* வாசலில் கோலமிடக் கூடாது.