இந்த வாரம் என்ன
ஆக.23 ஆவணி 7: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.ஆக.24 ஆவணி 8: பெருவயல், திருச்செந்துார் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாளுக்கு திருமஞ்சனம். ஆக.25 ஆவணி 9: திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், வாரியார் பிறந்த நாள். கரிநாள்.ஆக.26 ஆவணி 10: கிருஷ்ண ஜெயந்தி. கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம், பழநி கோயில்களில் முருகப்பெருமான் புறப்பாடு. முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுதல். ஆக.27 ஆவணி 11: பாஞ்ச ராத்திர ஜெயந்தி. மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்ஸவம் ஆரம்பம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ள பிரான் பால் அபிஷேகம். ஆக.28 ஆவணி 12: திருச்செந்துார் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம். ஆக.29 ஆவணி 13: ஏகாதசி விரதம். உப்பூர், தேரழுந்துார், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், பிள்ளையார்பட்டி இத்தலங்களில் விநாயகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம்.