இந்த வாரம் என்ன
மார்ச் 21 பங்குனி 7: திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் சிம்ம வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். மார்ச் 22 பங்குனி 8: திருவாரூர் தியாகராஜர் பவனி. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். மார்ச் 23 பங்குனி 9: மன்னார்குடி ராஜகோபால சுவாமி பட்சிராஜ அலங்காரம். ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் சூர்ணாபிஷேகம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மார்ச் 24 பங்குனி 10: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். மார்ச் 25 பங்குனி 11: ஏகாதசி, திருவோண விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. மார்ச் 26 பங்குனி 12: திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். மார்ச் 27 பங்குனி 13: மாதசிவராத்திரி. பிரதோஷம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். தண்டியடிகள் நாயனார் குருபூஜை. சிவன் கோயில்களில் மாலையில் நந்தீஸ்வரர் அபிஷேகம்.