உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

அக்.10 புரட்டாசி 24: சங்கடஹர சதுர்த்தி. கார்த்திகை விரதம். சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம். பாபநாசம் சிவபெருமான் புறப்பாடு. மதுரை அழகர்கோவில் சுந்தரவல்லித்தாயார் கோயிலில் பவனி. திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனத்தில் பவனி. வேலுார் ரத்தினகிரி பாலமுருகன் தங்கரதக் காட்சி. அக்.11 புரட்டாசி 25: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள்,மதுரை கூடலழகர் பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் பவனி. மன்னார்குடி ராஜகோபலசுவாமி புறப்பாடு. திருநாளைப்போவார் குருபூஜை. அக்.12 புரட்டாசி 26: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். அக்.13 புரட்டாசி 27: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவெம்பல் சிவன் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் பவனி. அக்.14 புரட்டாசி 28: சுவாமிமலை முருகன் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பத்ராசலம் ராமர், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. அக்.15 புரட்டாசி 29: குற்றாலம் குற்றாலநாதர் பவனி, திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். கரிநாள். அக்.16 புரட்டாசி 30: சுவாமிமலை முருகன் தங்கக்கவசம், வைரவேல் தரிசனம். அகோபிலமடம் 18வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.