உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ராகவி.எம், கல்யாண்புரி, டில்லி: *லாபம் அதிகரிக்க...வியாபாரிகள் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் லாபம் அதிகரிக்கும். சொக்கர்.ஏ, திருவான்மியூர், சென்னை:*அன்னம் (உணவு) பற்றி வேதத்தில் உள்ளதா...அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னாதோ' என்கிறது சாமவேதம். அன்னத்தின் வடிவமே கடவுள். கவிதா.ரா, கல்லுப்பட்டி, மதுரை: *'சோற்றிலே இருக்காரு சொக்கநாதர்' என்கிறார்களே...பசியால் வாடுபவருக்கு உணவே கடவுள். குமார்.கே, வண்டலுார், காஞ்சிபுரம்L *அம்மனுக்கு அன்னாபிேஷகம் உண்டா...காஞ்சி காமாட்சிக்கும், சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மனுக்கும் ஐப்பசியில் நடக்கிறது. லிங்கம்.ஆர், வீரபாண்டி, தேனி: *அபிஷேகம் செய்த அன்னத்தை என்ன செய்வர்? விலங்குகள், பறவைகள், பக்தர்களுக்கு பிரசாதமாக தருவர். தன்யா.ஸ்ரீ, குளச்சல், கன்னியாகுமரி: அன்னாபிேஷகத்திற்கு அரிசி கொடுத்தால்... நல்ல உணவு, அதிக லாபம், மோட்சம் கிடைக்கும். குமரன்.எம், பல்லடம் திருப்பூர்: *ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்? அறுவடை செய்த நெல்லை(அரிசி) சமைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி இது. திருமலை.பா, வல்லம், தென்காசி: *சிதம்பரம் கோயிலில் தினமும் அன்னாபிேஷகம் நடக்குமாமே...ஆம். தினமும் காலை 11:00 மணிக்கு ரத்தின சபாபதிக்கு மட்டும் அன்னாபிஷேகம் நடக்கும். கோபி.எஸ், வில்லியனுார், புதுச்சேரி: *தானத்தில் சிறந்தது எது... ஏன்? அன்னதானம். பசித்தவனுக்கு உணவு கொடுப்பது உயிரைக் கொடுப்பதற்கு சமம்.