கேளுங்க சொல்கிறோம்
எம்.கிருஷ்ணா, எட்டையபுரம், துாத்துக்குடி. *தை அமாவாசைக்கு என்ன சிறப்பு?பித்ருகாரகன் என்னும் சூரியன், மகனாகிய சனிக்குரிய மகர ராசியில், மாத்ருகாரகன் என்னும் சந்திரனுடன் இணையும் நாளே தை அமாவாசை. இன்று தர்ப்பணம் செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். கே.பவித்ரா, உத்தமபாளையம், தேனி.*அபிராமி பட்டருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?அபிராமி பட்டரின் வாக்கை காப்பாற்றுவதற்காக வானத்தில் பவுர்ணமியை அபிராமி வரவழைத்த நாள் தை அமாவாசை. எம்.அனிதா, லாஸ்பேட்டை, புதுச்சேரி.*வானதியான கங்கை பூமிக்கு வந்தது எப்படி? சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களான சகரர்கள் (60,000 பேர்கள்) தங்களின் இறப்புக்கு பின்னர் சாபம் காரணமாக வானுலகம் செல்ல முடியாமல் தவித்தனர். முன்னோரின் சாபம் தீர தவத்தில் ஈடுபட்ட பகீரதன் கங்கையை பூமிக்கு வரவழைத்து நீராட அவர்கள் நற்கதி அடைந்தனர். கே.பவானிசங்கர், சிவாஜிநகர், பெங்களூரு.*முன்னோர் சாபம் தீர...ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில் தர்ப்பணம், சிரார்த்தம், தில ஹோமம் செய்தால் முன்னோர் சாபம் தீரும். எல்.ராகவி, ஆவடி, திருவள்ளூர்.*அமாவாசையன்று வழிபட வேண்டிய தலங்கள்... பொதிகை மலை, பாபநாசம், தென்காசி, சதுரகிரி, அவினாசி, ராமேஸ்வரம், செதிலபதி, ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு மயிலாடுதுறை, அழகர்கோவில், திருவள்ளூர்.சி.கங்காதரன், பப்பன்கிலேவ், டில்லி.*பக்தருக்காக திதி கொடுத்த பெருமாள் கோயில் எங்குள்ளது?செங்கல்பட்டு அருகிலுள்ள நென்மேலியில் பெருமாள் கோயில் உள்ளது. 'சிரார்த்த சம்ரட்சகப் பெருமாள்' என்பது இவரது திருநாமம். எம்.ஆர்த்தி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.*அமாவாசையை கனத்த நாள் என்கிறார்களே... நீண்ட காலமாக நோய் உள்ளவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் அமாவாசையன்று உயிருக்கு போராடும் நிலை ஏற்படும் என்பதால் இந்நாளை 'கனத்த நாள்' என்பர். பி.ஸ்ரீராம், நாகர்கோவில், கன்னியாகுமரி.*அமாவாசையின் புராணப் பின்னணியைச் சொல்லுங்கள்.மரீசி முனிவரின் மகன் மாவசுவை ஒரு தேவலோக பெண் விரும்பினாள். ஆனால் அவளை புறக்கணித்த மாவசு, முன்னோருக்கு பிரியமான நதியாக மாறும்படி சபித்தான். அந்நாளே அமாவாசை. வி.சஞ்சீவ், காரைக்குடி, சிவகங்கை.*உக்ர தெய்வங்களை வழிபட ஏற்ற நாட்கள் எவை? அமாவாசை, பவுர்ணமி நாட்களில் துர்கை, காளி, பைரவர், நரசிம்மரை வழிபட்டால் எதிரி பயம், கடன் தொல்லை, நோய் தீரும்.