உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

மார்ச் 25, 2024 - பங்குனி உத்திரம்* பிரசாதம் என்பதற்கு 'அருள்' என பொருள். இதை சாப்பிடுவோருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும். * கோயில் தீபத்தில் வியாழனன்று நெய், சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் சேர்த்தால் கிரகபீடைகள் விலகும். * மாலையில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஐந்து அகல் தீபம் ஏற்றினால் பணச்சிக்கல், மனக்கவலை, குடும்பப் பிரச்னை தீரும். * மகத்தான புண்ணிய பலன் தரும் 'ஸ்ரீராம ஜெயம்' மந்திரத்தை 108 முறை தினமும் எழுதுங்கள். முன்ஜென்ம பாவங்கள் மறையும். * தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோயிலில் விளக்கேற்றுங்கள். சனியால் ஏற்படும் துன்பத்தைத் தாங்கும் வலிமை கிடைக்கும். * செய்யக் கூடாததைச் செய்தாலும், செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டாலும் பாவம் சேரும். * கோபப்படுதல் என்பது பாவம் செய்வதற்குச் சமம். * தீங்கு செய்பவர்கள் உண்மையாகவே நமக்கு உதவி செய்கிறார்கள். அதனால் நம் பாவம் தொலையும். * ஒருவருக்கு குருதிசை ஆரம்பமாகும் போதோ, முடியும் போதோ திருமணம் நடத்துவது கூடாது. * திருமணம் முடிந்ததில் இருந்து ஆறு மாதம் வரை தீர்த்த யாத்திரை, கடலில் நீராடுதல், மலையேறுதல் கூடாது.