உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

மே 10, 2024 - இன்று அட்சய திரிதியைஅட்சய திரிதியை நாளில் நடந்தவை...* வடக்கு திசையின் காவலர் குபேரன். இவர் செல்வங்களின் அதிபதியானார். * மகாபாரதத்தை விநாயகர் எழுதத் தொடங்கினார். * தன் நண்பரான குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட்டார். இதனால் குசேலருக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்தது. * பெருமாளின் மார்பில் இடம் பிடித்தாள் மகாலட்சுமி. * பரசுராமர், பலராமர் அவதாரம் நிகழ்ந்தது. * முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகைப் படைத்தார். * ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடியதால் தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிந்தது. * பாண்டவரின் மனைவியான திரவுபதிக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது. * ஹஸ்தினாபுரம் சபையில் திரவுபதிக்கு ஆடைகளைக் கொடுத்து மானத்தைக் காத்தார் கிருஷ்ணர்.