உள்ளூர் செய்திகள்

மந்திரமாவது திருநீறு

மதுரையை ஆட்சி செய்த மன்னர் கூன்பாண்டியன். இவருக்கு வெப்பு நோய் வந்த போது பதிகம் பாடி திருநீறு பூசச் செய்து குணப்படுத்தினார் திருஞானசம்பந்தர். இதை தினமும் பாடி திருநீறு பூசினால் தீராத நோயும் தீரும்.மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறுதந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறுசெந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறுபோதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறுஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறுசீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறுசத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறுபத்தி தருவது நீறு பரவ இனியது நீறுசித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.காண இனியது நீறு கவினைத் தருவது நீறுபேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறுமாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறுசேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.பூச இனியது நீறு புண்ணியமாவது நீறுபேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறுதேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.அருத்தமதாவது நீறு அவலம் அறுப்பது நீறுவருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறுபொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறுதிருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறுபயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறுதுயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறுஅயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறுபராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறுதராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறுஅரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறுமேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறுஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறுஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறுஎண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறுஅண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.