பின்பற்ற மறவாதீர்!
UPDATED : அக் 10, 2021 | ADDED : அக் 10, 2021
மகாளய பட்ச காலத்தில் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க! * தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். * சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.* தாம்பத்யம் கூடாது. வீட்டில் வாக்குவாதம் செய்யக் கூடாது. * வெளியிடத்தில் சாப்பிடுவது, வெங்காயம், பூண்டு, முருங்கை சேர்ப்பது கூடாது. * இந்த காலகட்டத்தில் முன்னோர் நம்முடன் இருப்பதால் விருந்துண்ணக் கூடாது.* மது, மாமிசம் சாப்பிடக் கூடாது. * கறுப்பு எள்ளை யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. * வாசலில் கோலமிடக் கூடாது.