கேளுங்க சொல்கிறோம்!
திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்பது ஏன்?கே.மீனாட்சி, மதுரைதர்மம் தழைக்கவும், நல்ல சந்ததி உருவாகவும் ஆதாரமாக இருப்பது திருமண பந்தம். தலைமுறை தலைமுறையாக இந்த பந்தம் தொடர வேண்டும் என்பதால், 'ஆயிரம் காலத்து பயிர்' என குறிப்பிட்டனர்.தோஷம், தீட்டு இரண்டும் ஒன்றா? கார்த்திக், சென்னை.தோஷம் என்றால் குறை, குற்றம், நோய் போன்றவற்றை குறிக்கும். இதற்கு பரிகாரம் உண்டு. கிரகதோஷம் இருந்தால் கோயிலில் பரிகாரம், வழிபாடு செய்யலாம். பிறப்பு, இறப்பால் உண்டாகும் தீட்டுக்காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பரிகாரம் இல்லை. ஒன்றாக எண்ணி குழம்ப வேண்டாம்.கர்ப்பிணி கோயிலுக்கு செல்ல கூடாதாமே...ஏன்?எஸ்.முத்துக்கருப்பன், அவினாசிசெல்லக்கூடாது என கருதுவது தவறு. தினமும் கோயிலில் வழிபாடு செய்யலாம். இதனால் அறிவுள்ள, அழகான குழந்தை பிறக்கும். நடைபயிற்சியாகவும் அமைவதால் சுகப்பிரசவம்ஏற்படும்.* வீட்டு பூஜையில் சாக்லேட், பிஸ்கட் வைத்து வழிபட குழந்தைகளை அனுமதிக்கலாமா?எஸ்.மதுரம், கோவைசாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை பூஜையோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். மனம், உடல் துாய்மையுடன் பிரசாதத்தை வீட்டில் செய்வதே முறையானது. அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது அல்லது அவரை பூசி விட சொல்வது, எது நல்லது?ஆர்.தளவாய் நாராயணசாமி, பெங்களூருஅர்ச்சகர் பூசுவதோ, அவரை பூசிவிட சொல்வதோ கூடாது. சுவாமியின் திருமேனி தீண்டி பூஜிப்பவர் என்பதால் ஆசாரக்குறைவு உண்டாகும். அவரது கையால் விபூதி பெறுவது மரபு.மீனாட்சியம்மன் கோயிலில் தீப்பிடித்ததால் நாட்டுக்கு தீங்கு நேருமா?சி.சசிசந்திரன்,சென்னைபரிகாரம் செய்யாவிட்டால் தீங்கு உண்டாகும். ஆகமத்தில் 'அத்புத சாந்தி விதி படலத்தில்' இதற்கான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. முறைப்படி இந்த பரிகாரங்களை மதுரையில் செய்ததால், அன்னை மீனாட்சியருளால் நாட்டிற்கு நன்மையே உண்டாகும்.* பழைய வீட்டை விலைக்கு வாங்கினால் கணபதிஹோமம் கட்டாயமா?ஜே.ஆர்.ராஜாராம், பரமக்குடிபழைய வீடானாலும் நமக்கு புதிது தானே! அதனால் குடியேறும் முன் கணபதி ஹோமம் நடத்துவது அவசியம். நம்மை சுற்றி விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் என்ன செய்வது?அனுராதா, புதுச்சேரிஆன்மிக பாதையை விட்டு, நாகரிகம் என்னும் பெயரில் சமூகம் திசை மாறியதால் ஏற்பட்ட விளைவு இது. இதை கண்டு தடுமாறாமல் இருக்க, கடவுளின் திருவடியை வணங்குவதே சால சிறந்தது.