கேளுங்க சொல்கிறோம்!
காசிக்கு ஒருமுறையாவது கட்டாயம் செல்லணுமா?ஏ.மூர்த்தி, திருவள்ளூர்'காசி' என்பதற்கு 'ஒளி' என்பது பொருள். ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டில் முதன்மையானது காசி. சிவபெருமானின் சடையிலிருந்து தோன்றிய கங்காநதி இங்கு ஓடுகிறது. கங்கைக்கரையில் முன்னோருக்கு சிராத்தம் செய்தால், ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும். எனவே கட்டாயம் காசியை தரிசிப்பது அவசியம். அம்மை வந்தால் வீட்டில் வேப்பிலை கட்டுவது ஏன்?கே.கனக விஜயன் மதுரைஅம்மையின் மூலம் வீட்டுக்கு மாரியம்மன் வருவதாக ஐதீகம். இதனை தான் 'அம்மை' எனச் சொல்கிறோம். மாரியம்மனுக்கு உகந்த வேப்பிலையை வாசலிலும், அம்மை கண்டவர்களின் படுக்கையிலும் வைத்திருக்க விரைவில் அம்மை இறங்கி விடும். பவுர்ணமியன்று நிலா வந்த பின்பு தான் விரதம் முடியுமா?ஜெ. மீனா, மதுரைநிலா வந்த பிறகு கோயில் தரிசனம் செய்வது அவசியம். அதன் பின்னரே விரதத்தை முடிக்க வேண்டும்.* வீட்டு வாசலில் மாக்கோலம் இடலாமா?ர.பிரேமா, வேலம்பாளையம்.தாராளமாக இடலாம். பண்டிகை, வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சி அன்று பூஜையறை, வாசலில் மாக்கோலம் இடுங்கள். மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாள். * மனிதனின் தலையெழுத்து எப்படி தீர்மானிக்கப்படுகிறது?சொ.காளிதாசன், பண்ருட்டிமாணவரின் எதிர்காலத்தை மதிப்பெண் தீர்மானிப்பது போல, முற்பிறவியில் செய்த பாவ, புண்ணிய அடிப்படையில் மனிதனின் தலையெழுத்து அமைகிறது. நம் வாழ்வை அது தீர்மானிக்கிறது. சுவர்ணாபிஷேகத்தில் பக்தர்களின் நகைகளை சுவாமிக்கு அணிவிப்பது சரிதானா?ப.விக்னேஸ்வரன், சென்னைபொன் நாணயங்களை மட்டும் சுவாமிக்கு, அபிஷேகம் செய்வது சுவர்ணாபிஷேகம். இப்போதோ பக்தர்கள் தங்களின் நகைகளை அணிவிக்கும் வழக்கம் வந்து விட்டது. திதி கொடுக்க ஏற்ற இடம் வீடா? கோயில் குளக்கரையா?பா.ஜெயஸ்ரீ, கடலுார்.அமாவாசை, கிரகணம் போன்ற புண்ணிய காலங்களில் செய்யப்படும் தர்ப்பணம், திதிகளை கோயில் குளக்கரையில் செய்யலாம். ஆண்டுதோறும் நடத்தும் முன்னோர் திவசத்தை, வீட்டில் செய்யலாம்.கோயில் வழிபாட்டு நாளில் துக்கம் கேட்க செல்வது தவறா?ஆர்.நாகலட்சுமி, அருப்புக்கோட்டைகிடையாது. கோயில் வழிபாடு முடிந்து, முதலில் வீட்டுக்கு செல்லுங்கள். கோயிலில் பெற்ற பிரசாதங்களை வைத்த பின்னர் துக்க வீட்டுக்கு செல்வதால் தவறில்லை.