கேளுங்க சொல்கிறோம்
* சகுனம் பார்ப்பது கட்டாயமா?எம்.வர்ஷிதா, கோவைஇல்லை. முக்கிய பணி, விaயாபாரம், சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது சகுனம் பார்த்தால் போதும்.* அர்ச்சகர், பூஜாரி என்பதன் பொருள் என்ன?எல்.ரக்ஷனா, சிவகங்கைகடவுளின் திருமேனியைத் தொட்டு பூஜை செய்யும் தகுதி பெற்றவர்கள் அர்ச்சகர்கள். 'அர்ச்ச' என்பது பூஜையைக் குறிக்கும். இதன் அடிப்படையில் பூஜாரி என்பதும் வழக்கில் உள்ளது. அதுவே 'பூசாரி' என்றானது. இரண்டுக்கும் பொருள் ஒன்றே. விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கலாமா?டி. ஹரின்யா, திருநெல்வேலிகூடாது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பூக்கள், இலைகள் தனித்தனியாக உள்ளன. விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்பூ அணிவிப்பது சிறப்பு. துளசி இலை ஏற்புடையது ஆகாது.சிலர் வாசலில் மணியைக் கட்டி காற்றில் ஒலிக்கச் செய்கிறார்களே..எல்.டி.யோகேஷ், பெங்களூருதீயசக்திகளை விரட்டி தெய்வசக்தியை வரவழைக்கும் ஆற்றல் மணியோசைக்கு உண்டு. மணி ஒலிக்கும் இடத்தில் திருஷ்டி தோஷம் ஏற்படாது.* சில கோயில்களில் ஆண்கள் சட்டையின்றி வழிபட வேண்டும் என்பது ஏன்?எல்.சாதனாஸ்ரீ, புதுச்சேரிபயபக்தியின் அடையாளம் இது. அந்தக் காலத்தில் எல்லா கோயில்களிலும் இந்த வழக்கம் இருந்தது. வேட்டியும், துண்டும் இடுப்பில் கட்டி வழிபடும் மரபு இன்றும் சில கோயில்களில் உள்ளது. இப்படி வழிபட்டால் காரியம் நடக்கணும் என்பதற்காக சாதாரண மனிதர்களுக்கு கூழைக்கும்பிடு போடும் அவசியம் ஏற்படாது. * அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?சி.ஜோஷிகா, திருவள்ளூர்60 ஆண்டு என்பது ஆயுள் காலத்தில் ஒரு சுழற்சி. 60 முடியும் போது மறுபிறவி எடுப்பதாகச் சொல்வது மரபு. முதல் சுழற்சியில் சுயநலத்துடன் வாழ்ந்தவர்கள் அடுத்த சுழற்சியில் கடவுள் சிந்தனையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே அறுபதாம் கல்யாணம் நடத்துகின்றனர்.எட்டாம் இடத்து சனி என்ன செய்யும்?எல்.சதிஷ்னா, நாகர்கோவில்பிறந்த ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி இருந்தால் தீர்க்காயுள் உண்டாகும். கோச்சாரத்தில் ராசிக்கு எட்டில் சனி வரும் காலத்தில் துன்பம் ஏற்படும். சனிக்கிழமையில் விரதமிருந்து காக்கைக்கு தயிர் கலந்த எள், எள்ளுச்சாதம் வைத்து வருவது நன்மை தரும்.