கேளுங்க சொல்கிறோம்
எம்.வைத்தியநாதன், ஆண்டிபட்டி, தேனி.*மறைந்தவரைத் தவிர பிறரை குருவாக ஏற்க மனம் மறுக்கிறது. என்ன செய்யலாம்? நீங்கள் விரும்பும் குருநாதர் படத்தின் முன் தினமும் தியானம் செய்யுங்கள். உங்களை அவர் வழிநடத்துவார்.எம்.அருணா, பாபநாசம், திருநெல்வேலி.*வீட்டில் வளரும் துளசியில் மாலை கட்டி பெருமாளுக்கு சாத்தலாமா?சாத்தலாம். வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது. வி.கமலம், மேல்மலையனுார், விழுப்புரம்.*புதிய கோயில் கட்டுவது அல்லது பழைய கோயிலை புதுப்பிப்பது - எது சிறந்தது?பழைய கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவது நல்லது. பழைய கோயில்களை கவனிக்காமல் புதிய கோயில் கட்டுவதால் என்ன பயன்?கே.நந்தினி, திருவட்டாறு, கன்னியாகுமரி.*சில கோயில்களில் எட்டுக்கைகளுடன் அம்மன் இருக்கிறதே...இந்த அம்மனின் பெயர் ஜெயதுர்கை. இவளை வழிபட்டால் வெற்றி நிச்சயம். ஆர்.கண்ணன், ராமமூர்த்திநகர், பெங்களூரு.*பிச்சை கேட்பவர்களில் பலர் வசதியானவர்களாக இருக்கிறார்களே….பிச்சை எடுப்பதே தவறு. இவர்களால்தான் நம் நாட்டின் மானம் பறி போகிறது. எல்.ஸ்ரீதர், மாம்பலம், சென்னை*ஆசிரியரும் குருநாதரும் ஒருவரா...பாடம் நடத்துபவர் ஆசிரியர். ஆன்மிக விஷயங்களை உபதேசிப்பவர் குருநாதர். சி.ஆர்த்தி, துவாரகா, டில்லி.*சுவாமிக்கு சாற்றும் எலுமிச்சை மாலையில் எத்தனை பழங்கள் இருக்க வேண்டும்?27, 54, 108 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். டி.பூபதி, அனந்தமங்கலம், செங்கல்பட்டு.*கோயிலை துாய்மை செய்யும் உழவாரப்பணியால் கிடைக்கும் நன்மை...இன்பமும் துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வரும். அதில் வெற்றி பெற்ற மனஉறுதி வேண்டும். இதைத் தருவது உழவாரப்பணி. எஸ்.பகவதி, தேவகோட்டை, சிவகங்கை.*சுவாமிக்குரிய வஸ்திரங்களை வீட்டில் துவைத்து கோயிலுக்கு கொடுக்கலாமா?கொடுக்கலாம். இதை தனியாக துவைத்து கொடுங்கள். இது புண்ணிய செயல்.ஆர்.மாணிக்கவேல், அவிநாசி, திருப்பூர்.*மனிதரைத் தவிர மற்ற உயிர்கள் முக்தி அடையுமா?முக்தி அடையும். பல பிறவிகளில் செய்த புண்ணியத்தால் விலங்காக பிறந்தாலும், பக்தியுடன் இருந்தால் முக்தி கிடைக்கும். உதாரணமாக பசு சிவபெருமானை பூஜித்த ஊர் திருஆவடுதுறை. மயில் - மயிலாடுதுறை.