உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்எண்ணும் பொழுது எளிதெய்த நல்காய் எழுதா மரையும்விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே!பொருள்: தாமரைமலர், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், பக்தர்களின் அன்பு மனம் என்று எங்கும் நிறைந்திருக்கும் சகலகலாவல்லியே! சரஸ்வதி தேவியே! இசை, நடனம், கல்வி, இனிமையான சொற்கள் நிறைந்த பாடல் ஆகியவற்றையெல்லாம் கற்க விரும்புகிறேன். இவை அனைத்தும் எளிதாக வந்தடைய அருள்புரிவாயாக.