மனப்பாடப்பகுதி
UPDATED : அக் 21, 2018 | ADDED : அக் 21, 2018
பிரமன் மால் அறியாத பெருமையன்தரும மாகிய தத்துவன் எம்பிரான்பரமனார் உறை பாண்டிக் கொடுமுடிகரும மாகத் தொழு மட நெஞ்சமே!(திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்)பொருள்: அறியாமையில் வாழும் மனமே! பிரம்மனும், திருமாலும் அறிய முடியாத பெருமைமிக்கவன் சிவன். தருமமே வடிவான அவன், அரிய தத்துவமாகத் திகழ்கின்றான். பாண்டிக்கொடுமுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அப்பெருமானை வழிபடுவதை உன் கடமையாகக் கொள்வாயாக.