மனப்பாடப்பகுதி
UPDATED : ஜூன் 21, 2019 | ADDED : ஜூன் 21, 2019
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்துஇங்கில்லையால் என்று இரணியன் துாண்புடைப்பப்அங்கப் பொழுதே அவன் வீயத் தோன்றிய என்சிங்கப் பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே!(நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்)பொருள்: 'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று இரண்யன் கேட்க, 'எங்கும் இருக்கிறான்' என பிரகலாதன் பதிலளித்தான். கோபம் கொண்ட இரண்யன் எதிரில் இருந்த துாணைத் தாக்க, அதிலிருந்து திருமால் நரசிம்மராகத் தோன்றி கொன்றழித்தார். சிறப்புமிக்க சிங்கப்பெருமானின் பெருமையை நம்மால் எப்படி ஆராய முடியும்?