மனப்பாடப்பகுதி!
UPDATED : பிப் 24, 2015 | ADDED : பிப் 24, 2015
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சன்மமும் மரணமும் இன்றித் தீருமே இன்மையே ராம என்றிரண்டு எழுத்தினால். பொருள்: 'ராம' என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை பக்தியுடன் சொல்வோருக்கு வாழ்வில் நன்மை சேரும். செல்வ வளம் பெருகும். முற்பிறவியில் செய்த தீமை, பாவச் செயல் கூட அழிந்து தேயும். பிறவிப்பிணி தீரும். மரணபயம் அற்றுப் போகும்.