உள்ளூர் செய்திகள்

பிரசாதம் இது பிரமாதம் - தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள் அரிசி - 1 கப்தேங்காய்த் துருவல் - 1 கப்பச்சை மிளகாய் - 4தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுகடுகு - 1 ஸ்பூன்உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்செய்முறை: அரிசியை வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து தேங்காய்த் துருவலை அதில் சேர்த்து வதக்கி ஆற வைத்துள்ள சாதத்தில் போடவும். உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிளறவும். கொத்தமல்லி தழையைப் போட்டு இறக்கி வைக்கவும்.