உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

மத்யோத்பவே புவ இலாவ்ருத நாம்னி வர்ஷே கௌரி ப்ரதான வனிதா ஜனமாத்ர பாஜி!ஷர்வேண மந்த்ர நுதிபி: ஸமுபாஸ்ய மானம் ஸங்கர்ஷணாத் மக மதீஷ்வர ஸம்ஷ்ரயே த்வாம்!!குருவாயூரப்பனின் வெவ்வேறு வடிவங்களையும், அதை வழிபடுவோரையும் பற்றி நாராயண பட்டத்ரி இந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளார். ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து மேல்ஆகமூர்த்தி ஆயவண்ணம் என் கொல் ஆதிதேவனேஎன்று பாசுரத்தில் ஆழ்வார் கூறியுள்ளபடி இலாவ்ருதம் என்னும் கைலாயத்தில் வீற்றிருக்கும் பரமேஸ்வரன் பார்வதியுடன் சேர்ந்து ஸங்கர்ஷணன் என்னும் மகாவிஷ்ணு மூர்த்தியை வழிபடுகிறார். அவரையே தானும் வழிபடுவதாக நாராயண பட்டத்ரி கூறுகிறார். இந்த ஸ்லோகத்தை பாடினால் 'நான்' என்னும் ஆணவம் அழியும். அனைவரும் சமம் என்னும் எண்ணம் உருவாகும்.