சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* தீபாவளியை தவிர மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய்க் குளியல் கூடாது.* தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட பால், வெண்கல பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீர் குடிக்கக் கூடாது.* இரவில் இருட்டில் அமர்ந்து உண்பது கூடாது. * காலையில் பால் சோறு, இரவில் எள் கலந்த சோறு சாப்பிடக் கூடாது. * வடக்கு நோக்கி தலையும், தெற்கு நோக்கி காலையும் நீட்டி துாங்கக் கூடாது. * புழுங்கல் அரிசியால் சமைத்த உணவுகளை தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யக் கூடாது.* செவ்வாய்க்கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.* இலையில் பரிமாறும் போது உப்பை மட்டும் கையால் பரிமாறக் கூடாது. * ஆண்டு தோறும் பிறந்த நாளை தமிழ் மாத நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுவது நல்லது.* ஏகாதசி, சஷ்டி, கார்த்திகையன்று விரதம் இருந்தால் எலுமிச்சைச்சாறு, மோர் குடிப்பதை தவிர்க்கவும். (இது விரத பலனை குறைக்கும்)