உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* நன்மையும், செல்வமும் பெருக ராம நாமத்தை தினமும் ஜபியுங்கள். * நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் 'ராம் ராம்' என்றே உட்சென்று வெளியேற வேண்டும். * அறியாமல் செய்த பாவம் தீர, ராம நாமம் ஜபிப்பது சிறந்த பரிகாரம். * எல்லா விதமான கஷ்டம், துக்கத்தைப் போக்கும் சக்தி ராம நாமத்திற்கு உண்டு. * மந்திர உபதேசிக்க குருநாதர் கிடைக்கவில்லையே எனக் கவலைப்படாதீர். 'ராம நாமமே' தனக்குள் குருவைக் கொண்டுள்ளது. * தினமும் 108 முறை ராம நாமம் ஜபித்தால் துக்கம், அவமானம் தடுக்கப்படும் * 'ராம' என்று ஜபிக்க பணம் தேவையில்லை. மனமிருந்தால் போதும். இதையே பெரியவர்கள், 'நா உண்டு, நாமா உண்டு' என்றனர். * ராம நாமம் சொல்லும் பெண்கள் குடியிருக்கும் வீடு கோயிலாகத் திகழும். * எல்லாவித சாஸ்திர அறிவும் ராம நாமாவில் அடங்கியுள்ளன. * எல்லாவித நோய்களுக்கும் ராம நாமம் சிறந்த மருந்து. * பயணம் செய்யும் போது ராம நாமம் சொன்னால் விபத்து ஏற்படாது.* காசியில் இரவு நடக்கும் சப்தரிஷி பூஜையில் வில்வ இலைகளில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி ஏழு பண்டாக்கள் விஸ்வநாதரை பூஜை செய்வர். * சமைக்கும் பொழுது ராம நாமம் ஜபித்தால் உணவு பிரசாதமாகும். அதை உண்பவருக்கு துாய மனம், குணங்கள், நோயற்ற தன்மை கிடைக்கும்.* சத்தியம், தர்மவழிகளைப் பின்பற்றும் நல்லவர்களுக்கு மட்டுமே ராம நாமத்தை ஜபிக்கும் பாக்கியம் கிடைக்கும்.