உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* தேவாரப்பாடல் பாடிய மூவர் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.* தேவாரம் பாடிய மூவருடன் மாணிக்கவாசகரையும் சேர்த்து 'நால்வர்' என அழைப்பர். * மகாகவி காளிதாசரால் எழுதப்பட்ட முருகனின் வரலாறு குமார சம்பவம்.* கல்லையே பூவாக கருதி சிவபூஜை செய்தவர் சாக்கிய நாயனார்.* சடகோபரை 'நம் ஆழ்வார்' என்று அன்புடன் அழைத்தவர் ரங்கநாதப்பெருமாள். * பலனை எதிர்பார்த்து வழிபடுவதற்கு காம்ய பக்தி என்று பெயர். பலனை எதிர்பார்க்காமல் வழிபடுவது நிஷ்காம்ய பக்தி.* லட்சுமணமுனி என அழைக்கப்படுபவர் ராமானுஜர்.* திருமாலிடம் இருக்கும் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.* திருச்செந்துாரின் புராதனப்பெயர் திருச்சீரலைவாய். * ஆட்டுமுகம் கொண்ட சூரபத்மனின் தங்கை அஜமுகி.* நோய் தீர வேண்டி மாரியம்மனுக்கு செய்யும் வழிபாடு மாவிளக்கு. * சிவகிரி, சக்திகிரி என்னும் மலைகளை தோளில் காவடியாக சுமந்தவர் இடும்பன். * மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்டபெயர் தடாதகை பிராட்டியார். மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என்பதால் கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறாள். * சூரசம்ஹாரம் நிகழ்த்திய முருகன் சாந்தமுடன் வீற்றிருக்கும் படைவீடு திருத்தணி.