உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* குடும்பத்தில் ஒருவருக்குத் திருமணமான இரண்டு மாதத்திற்கு பின்னரே, மற்றொருவருக்குத் திருமணம் செய்ய வேண்டும். * நீங்கள் என்னதான் தர்மம் செய்தாலும் பெற்றோரை கவனிக்காவிட்டால் அதற்கு பலன் கிடைக்காது. * காயத்ரி மந்திரம், இஷ்டதெய்வத்தின் மந்திரத்தை 27 முறை ஜபிக்க வேண்டும். * சுபநிகழ்ச்சி செய்த பிறகும், வீட்டுக்கு வந்த நண்பர்கள், உறவினர்களை வழி அனுப்பிய பிறகும் குளிக்கக் கூடாது. * உண்மை பேசுவது என்பது ஆயிரம் அஸ்வமேத யாக பலனுக்குச் சமம். சத்தியத்தாலும் மன அடக்கத்தாலும் தர்மத்தை அனுசரிப்பவர்கள் சொர்க்கத்திற்கு செல்வர். * ஈர ஆடையுடன் வழிபாடு, சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. * உங்கள் முயற்சி வெற்றியடைய கீழ்க்கண்ட நாளில் குறிப்பிட்ட திசையில் பயணம் செய்யலாமே.செவ்வாய் - கிழக்குதிங்கள், சனி - தெற்குபுதன், வியாழன் - மேற்கு வெள்ளி, ஞாயிறு - வடக்கு