சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஜூலை 28, 2015 | ADDED : ஜூலை 28, 2015
1. சத்திய லோகத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்டவர்......ரங்கநாதர்2. ரங்கநாதரைப் பூலோகத்திற்கு கொண்டு வந்தவர்.......அயோத்தி மன்னர் இஷ்வாகு3. ஸ்ரீரங்கத்தில் கோவில் கட்டிய சோழ மன்னன்........தர்மவர்மன்4. ரங்கநாதருக்குரிய சிறப்பு பெயர்......அழகிய மணவாளன்( அழகு மாப்பிள்ளை என்று பொருள் )5. ஆழ்வார்களில் ஸ்ரீரங்கத்தைப் பாடியவர்கள்........11 பேர்6. ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறையை ஒழுங்குபடுத்தியவர்......ராமானுஜர்7. ராமர் வழிபட்டதால் ரங்கநாதருக்கு .........என்று பெயர்பெரிய பெருமாள்8. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம்.....புன்னை9. மாலை போல ஸ்ரீரங்கத்தைச் சுற்றி ஓடும் நதிகள்.....காவிரி, கொள்ளிடம்10. ரங்கநாதரை ராமனிடம் பரிசாகப் பெற்றவர்.......விபீஷணன்