உள்ளூர் செய்திகள்

சிறந்த தர்மம்...

* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே தர்மங்களில் சிறந்தது.* கடவுள் அறிவுக் கடலாக உள்ளார். அக்கடலில் நாம் ஒரு நீர்த்துளியாக இருக்கிறோம். * அன்பு எதையும் பொறுத்துக் கொள்ளும். அன்பு உள்ள இடத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். * எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். நாம்தான் அதை அறிவதில்லை. * மனிதன் உண்ண மறந்தாலும், தியானம் செய்ய மறக்க கூடாது. * மனதை கட்டுப்படுத்துங்கள். அப்படி செய்தால் பல நன்மை உண்டு. * பயம் இருக்கும் வரையில் நீ அறிவாளியாக முடியாது. * பள்ளிகள், தொழிற்சாலைகள் அதிகமானால் சிறைச்சாலைகள் குறைந்து விடும். * மலர்ந்த முகமும் இனிய சொல்லும்தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி. * மனதில் லட்சியத்தை பற்றிய ஆழ்ந்த யோசனை எழுந்தால், விரைவில் அதை அடைவாய். * உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.* மனதில் கருணை இருந்தால் மட்டுமே கடவுளின் அருள் கிடைக்கும். * உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால், வாக்கிலும் அதன் தன்மை வெளிப்படும். * நம்பிக்கை காமதேனு போன்றது. அதனிடம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.சொல்கிறார் பாரதியார்