உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்யமுனீந்த்ர தேவார்ச்சித ஸேகராய!சந்த்ரார்க்க வைஸ்வானர லோசனாயதஸ்மை வகராய நமஸிவாய!!பொருள்: வசிஷ்டர், அகத்தியர், கவுதமர் முதலிய சிறந்த முனிவர்களால் வணங்கப்பட்டவரே! தேவர்களால் பூஜிக்கப்படும் முடியைப் பெற்றவரே! சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரைக் கண்களாகப் பெற்றவரே! 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தில், நான்காவது எழுத்தாக வகாரத்தைக் கொண்டவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.