எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்
UPDATED : பிப் 27, 2018 | ADDED : பிப் 27, 2018
காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என குறிப்பிடப்படுவது நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைவதாகும்.நட்சத்திரம் - நாள் - பணிகள்ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி - மேல்நோக்கு - செடி, கொடி, மரம் நடுதல் கட்டடம், கோயில் மதில் கட்டுதல்அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி -சமநோக்கு - வாகனம், பசு, காளை, செல்ல பிராணிகள் வாங்குதல் சாலை அமைத்தல், நிலை வைத்தல், வயல் உழுதல்பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி - கீழ்நோக்கு - கிணறு, பாதாள சாக்கடை தோண்டுதல், சுரங்கம் அமைத்தல், கிழங்கு வகை பயிரிடுதல்